caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Room அத்தியாயம், வசனம் 28

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 84 · 30:28

ضَرَبَ لَكُم مَّثَلًا مِّنْ أَنفُسِكُمْ هَل لَّكُم مِّن مَّا مَلَكَتْ أَيْمَٰنُكُم مِّن شُرَكَآءَ فِى مَا رَزَقْنَٰكُمْ فَأَنتُمْ فِيهِ سَوَآءٌ تَخَافُونَهُمْ كَخِيفَتِكُمْ أَنفُسَكُمْ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلْـَٔايَٰتِ لِقَوْمٍ يَعْقِلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் உங்களுக்கு உங்களிலிருந்தே ஓர் உதாரணத்தை விவரிக்கின்றான். நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில் உங்களுக்கு உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களில் (-உங்கள் அடிமைகளில்) பங்காளிகள் யாரும் இருந்து, நீங்கள் (அனைவரும்) அதில் சமமானவர்களாக ஆகிவிட்டீர்களா? (அப்படி இல்லையே!) அவர்களை (-உங்களுக்கு நாம் கொடுத்த செல்வத்தில் உங்கள் அடிமைகளை உங்களுடன் சேர்த்துக் கொள்ள) நீங்கள் பயப்படுகிறீர்கள் -(அல்லவா?) நீங்கள் (-சுதந்திரமானவர்கள்) உங்களை -(உங்களில் ஒருவர் மற்றவர் தனது சொத்தில் பங்காளியாக ஆகுவதை) பயப்படுவது போன்று. (சுதந்திரமான பங்காளிகளை பயப்படுவது போல நீங்கள் உங்கள் அடிமைகளையும் பயப்படுகிறீர்கள், அவர்களை கூட்டாக்கிக் கொண்டால் சுதந்திரமாக செயல்பட முடியாதென்று. ஆகவே, அல்லாஹ் எப்படி தனது அடியார்களை தனக்கு சொந்தமானவற்றில் கூட்டாக்கிக் கொள்வான்? அவர்களுக்கு அவனுடன் கூட்டாக எத்தகுதியும் இல்லையே!) சிந்தித்துப் புரிகின்ற மக்களுக்கு (நம்) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.
Tamil Translation - Omar Sharif(இணைவைப்பாளர்களே!) அவன் உங்களுக்கு உங்களிலிருந்தே ஓர் உதாரணத்தை விவரிக்கிறான். நாம் உங்களுக்கு (மட்டும் உரிமையாக்கி) கொடுத்த (செல்வத்)தில் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களில் (-உங்கள் அடிமைகளில்) யாரும் உங்களுக்கு பங்காளிகளாக இருப்பதும், நீங்கள் (அனைவரும்) அதில் சமமானவர்களாக ஆகிவிடுவதும் முடியுமா? அவர்களை (-உங்களுக்கு நாம் கொடுத்த செல்வத்தில் உங்கள் அடிமைகளை உங்களுடன் சேர்த்துக் கொள்ள) நீங்கள் பயப்படுகிறீர்கள் -(அல்லவா?) நீங்கள் (-சுதந்திரமானவர்கள்) உங்களை - (உங்களில் ஒருவர் மற்றவர் தனது சொத்தில் பங்காளியாக ஆகுவதை) பயப்படுவது போன்று. (சுதந்திரமான பங்காளிகளை பயப்படுவது போல நீங்கள் உங்கள் அடிமைகள் உங்களுடன் பங்காளிகளாக ஆகுவதை பயப்படுகிறீர்கள். யாரையும் கூட்டாக்கிக் கொண்டால் சுதந்திரமாக செயல்பட முடியாதென்று நினைக்கிறீர்கள். அப்படி இருக்க, அல்லாஹ் எப்படி தனது படைப்புகளை தனக்கு உரிமையானவற்றில் கூட்டாக்கிக் கொள்வான்? அவனுடன் கூட்டாகுவதற்கு எந்தத் தகுதியும் யாருக்கும் இல்லையே!) சிந்தித்துப் புரிகிற மக்களுக்கு (நம்) வசனங்களை இவ்வாறு தெளிவாக விவரிக்கிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi28. (மனிதர்களே! நீங்கள் அவனுடைய மேன்மையை அறிந்து கொள்வதற்காக) உங்களுக்குள்ளாகவே அவன் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். நாம் உங்களுக்குக் கொடுத்த பொருள்களில், உங்கள் அடிமைகளில் எவரேனும் (உங்கள் பொருள்களுக்கு) உங்களுடன் சம உரிமை உடையவர்களாக ஆகிவிடுவார்களா? அல்லது நீங்கள் உங்களைப் பொருட்படுத்துவதைப்போல் அவர்களையும் பொருட்படுத்துவீர்களா? (பொருட்படுத்த மாட்டீர்களே! இவ்வாறிருக்க, படைக்கப்பட்ட இவற்றை நீங்கள் எனக்கு இணை ஆக்கலாமா?) அறிவுடைய மக்களுக்கு (நம்) வசனங்களை இவ்வாறு விவரித்துக் கூறுகிறோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70