وَهُوَ ٱلَّذِى يَبْدَؤُا۟ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥ وَهُوَ أَهْوَنُ عَلَيْهِ وَلَهُ ٱلْمَثَلُ ٱلْأَعْلَىٰ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் படைப்புகளை ஆரம்பமாக படைக்கின்றான். பிறகு, (அவை அழிந்த பின்னர்) அவன் அவற்றை மீண்டும் படைக்கின்றான். அது அவனுக்கு மிக இலகுவானதே. வானங்களிலும் பூமியிலும் மிக உயர்ந்த தன்மைகள் அவனுக்கே உரியன. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் படைப்புகளை ஆரம்பமாக படைக்கிறான். பிறகு, (அவை அழிந்த பின்னர்) அவன் அவற்றை மீண்டும் படைப்பான். அதுவோ அவனுக்கு மிக இலகுவானதாகும். இன்னும், வானங்களிலும் பூமியிலும் மிக உயர்ந்தத் தன்மைகள் அவனுக்கே உரியன. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi27. அவன்தான் படைப்புகளை ஆரம்பத்தில் உற்பத்தி செய்பவன். அவனே (அவை மரணித்த பின்னரும் உயிர் கொடுத்து) அவற்றை மீளவைக்கிறவன். இது அவனுக்கு மிக்க எளிது. வானங்களிலும் பூமியிலும் அவனுடைய (உதாரணமும் பரிசுத்தத்) தன்மை(யும்)தான் மிக்க மேலானதாகும். அவன் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.