وَمِنْ ءَايَٰتِهِۦٓ أَن تَقُومَ ٱلسَّمَآءُ وَٱلْأَرْضُ بِأَمْرِهِۦ ثُمَّ إِذَا دَعَاكُمْ دَعْوَةً مِّنَ ٱلْأَرْضِ إِذَآ أَنتُمْ تَخْرُجُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான் வானமும் பூமியும் அவனுடைய கட்டளையின்படி (அவற்றுக்குரிய இடத்தில் நிலையாக) நிற்பது. பிறகு, அவன் உங்களை பூமியிலிருந்து ஒருமுறை அழைத்தால் அப்போது நீங்கள் (அதிலிருந்து) வெளியேறுவீர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், வானமும் பூமியும் அவனுடைய கட்டளையின்படி (அவற்றுக்குரிய இடத்தில் நிலையாக) நிற்பது, அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். பிறகு, அவன் உங்களை பூமியிலிருந்து ஒருமுறை அழைத்தால், அப்போது நீங்கள் (அதிலிருந்து உயிருடன்) வெளியேறுவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi25. வானமும் பூமியும் அவன் கட்டளைப்படி நிலை பெற்றிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். (உங்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் அதில் உயிர் வாழ்ந்து மரணித்துப் பூமியில் அடக்கப்பட்டதன் பின்னர்) அவன் உங்களை அழைக்கும்போது ஒரே அழைப்பில் நீங்கள் பூமியில் இருந்து வெளிப்பட்டு விடுவீர்கள்.