caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Room அத்தியாயம், வசனம் 24

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 84 · 30:24

وَمِنْ ءَايَٰتِهِۦ يُرِيكُمُ ٱلْبَرْقَ خَوْفًا وَطَمَعًا وَيُنَزِّلُ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَيُحْىِۦ بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَآ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَٰتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுடைய அத்தாட்சிகளில் இருந்து, அவன் உங்களுக்கு மின்னலை பயமாகவும் ஆசையாகவும் காட்டுகின்றான். இன்னும், வானத்திலிருந்து மழையை இறக்குகின்றான். அதன் மூலம் பூமியை -அது மரணித்த பின்னர்- உயிர்ப்பிக்கின்றான். நிச்சயமாக இதில் சிந்தித்து புரிகின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவன் உங்களுக்கு மின்னலை பயமாகவும் ஆசையாகவும் காட்டுவதும்; இன்னும், வானத்திலிருந்து மழையை அவன் இறக்குவதும்; அதன் மூலம் பூமியை - அது மரணித்த பின்னர் - உயிர்ப்பிப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். சிந்தித்து புரிகிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
Tamil Translation - Abdulhamid Baqawi24. நயமும் பயமும் தரக்கூடியவாறு மின்னலை அவன் உங்களுக்குக் காண்பிப்பதும், மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து இறந்த பூமியை செழிக்கச் செய்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளனவாகும். அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக இதில் (ஒன்றல்ல) பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70