وَمِنْ ءَايَٰتِهِۦ مَنَامُكُم بِٱلَّيْلِ وَٱلنَّهَارِ وَٱبْتِغَآؤُكُم مِّن فَضْلِهِۦٓ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَٰتٍ لِّقَوْمٍ يَسْمَعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான் நீங்கள் இரவிலும் பகலிலும் தூங்குவதும் அவனுடைய அருளிலிருந்து நீங்கள் தேடுவதும். நிச்சயமாக (உபதேசங்களை) செவியேற்கின்ற மக்களுக்கு இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நீங்கள் இரவிலும் பகலிலும் தூங்குவதும்; அவனுடைய அருளிலிருந்து நீங்கள் (பொருள் சம்பாதிக்க) தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். (உபதேசங்களை) செவியேற்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
Tamil Translation - Abdulhamid Baqawi23. இரவிலும் பகலிலும் நீங்கள் நித்திரை செய்து இளைப்பாறிக் கொள்வதும் (பூமியின் பல பாகங்களிலும் சென்று) நீங்கள் அவனுடைய அருளைத் தேடிக் கொள்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (நல்லுபதேசத்தைச்) செவியுறும் மக்களுக்கு இதில் நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.