إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَمَاتُوا۟ وَهُمْ كُفَّارٌ فَلَن يُقْبَلَ مِنْ أَحَدِهِم مِّلْءُ ٱلْأَرْضِ ذَهَبًا وَلَوِ ٱفْتَدَىٰ بِهِۦٓ أُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக எவர்கள் நிராகரித்து, அவர்கள் நிராகரிப்பாளர்களாகவே இறந்து விடுகிறார்களோ அவர்களில் ஒருவரிடமிருந்தும் (அவரது குற்றம் மன்னிக்கப்படுவதற்காக) பூமி நிறைய தங்கத்தை அவர் ஈடாக கொடுத்தாலும் அறவே (அது) அங்கீகரிக்கப்படாது. இவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு. இவர்களுக்கு உதவியாளர்களில் ஒருவரும் இல்லை!
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக எவர்கள் நிராகரித்து, இன்னும் அவர்கள் நிராகரிப்பாளர்களாகவே இருந்த நிலையில் இறந்து விடுகிறார்களோ அவர்களில் ஒருவரிடமிருந்தும் (அவரது குற்றம் மன்னிக்கப்படுவதற்காக) பூமி நிறைய தங்கத்தை அவர் மீட்புத் தொகையாக கொடுத்தாலும் அறவே (அது) அங்கீகரிக்கப்படாது. அவர்கள், - துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு. இன்னும், உதவியாளர்களில் ஒருவரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்.
Tamil Translation - Abdulhamid Baqawi91. நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (அந்நிராகரிப்பிலிருந்து மீளாது) நிராகரித்த வண்ணமே இறந்தும் விடுகின்றனரோ அவர்களில் ஒருவனுக்கு இப்பூமி நிறைய தங்கம் இருந்து, அதைத் (தன் குற்றத்தை மன்னிப்பதற்குத்) தனக்கு ஈடாக அவன் கொடுத்த போதிலும் (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. இவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அங்கு) ஒருவரும் இருக்கமாட்டார்!