إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بَعْدَ إِيمَٰنِهِمْ ثُمَّ ٱزْدَادُوا۟ كُفْرًا لَّن تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلضَّآلُّونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக தாங்கள் நம்பிக்கை கொண்டதற்கு பின்னர் நிராகரித்து, பிறகு நிராகரிப்பையே அதிகப்படுத்தியவர்கள், அவர்களுடைய மன்னிப்புக்கோருதல் அறவே அங்கீகரிக்கப்படாது. அவர்கள்தான் வழி கெட்டவர்கள்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக எவர்கள் - அவர்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிராகரித்தார்களோ; பிறகு, நிராகரிப்பையே அதிகப்படுத்தினார்களோ - அவர்களுடைய மன்னிப்புக்கோருதல் அறவே அங்கீகரிக்கப்படாது. இன்னும், அவர்கள்தான் வழி கெட்டவர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi90. ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்துவிட்டு மென்மேலும், அந்நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறார்களோ, அவர்களுடைய மன்னிப்புக் கோருதல் நிச்சயமாக அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள்தான் (முற்றிலும்) வழி கெட்டவர்கள்.