ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا۟ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامًا مَّعْدُودَٰتٍ وَغَرَّهُمْ فِى دِينِهِم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇது, "சில நாட்களைத் தவிர (நரக) நெருப்பு எங்களை அறவே தீண்டாது" என்று நிச்சயமாக அவர்கள் கூறிய காரணத்தாலாகும். தங்கள் மார்க்கத்தில் (அவர்கள்) பொய் கூறுபவர்களாக இருந்தது, அவர்களை ஏமாற்றிவிட்டது.
Tamil Translation - Omar Sharifஅதற்கு காரணம், “எண்ணப்படும் (குறிப்பிட்ட) சில நாட்களைத் தவிர (நரக) நெருப்பு எங்களை அறவே தீண்டாது’’ என்று நிச்சயமாக அவர்கள் கூறியதாகும். இன்னும், அவர்கள் தங்களது மார்க்கத்தில் பொய்களை இட்டுக்கட்டி கூறி வந்தது அவர்களை ஏமாற்றிவிட்டது.
Tamil Translation - Abdulhamid Baqawi24. இதன் காரணம்: ‘‘சில நாள்களைத் தவிர நரகத்தின் நெருப்பு நிச்சயமாக எங்களைத் தீண்டாது'' என்று அவர்கள் கூறிக்கொண்டிருப்பதுதான். மேலும், தங்கள் மார்க்க (விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறி வந்ததும் அவர்களையே ஏமாற்றிவிட்டது.