caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 25

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:25

فَكَيْفَ إِذَا جَمَعْنَٰهُمْ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அறவே அதில் சந்தேகமில்லாத ஒரு நாளில் நாம் அவர்களை ஒன்று சேர்த்து, எல்லா ஆத்மாவும் தான் செய்ததற்கு முழுமையாக (கூலி) அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்? (அந்நாளில்) அவர்கள் அநீதி இழைக்கப்படமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, (நபியே!) அறவே அதில் சந்தேகமில்லாத ஒரு நாளில் நாம் அவர்களை (உயிர்ப்பித்து) ஒன்று சேர்த்தால்; இன்னும், ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்கு முழுமையாகக் கூலி கொடுக்கப்பட்டால் (அப்போது அவர்களின் நிலைமை) எப்படி (பரிதாபமாக) இருக்கும்? (அந்நாளில்) அவர்கள் (சிறிதும்) அநீதி இழைக்கப்படமாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi25. (நபியே!) சந்தேகமற்ற ஒரு (விசாரணை) நாளில் நாம் அவர்களை ஒன்று சேர்த்து (அவர்களுடைய) ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குத் தக்க பலன் முழுமையாக அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்? அவர்கள் (தங்கள் பிரதிபலனை அடைவதில்) சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70