أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُوا۟ نَصِيبًا مِّنَ ٱلْكِتَٰبِ يُدْعَوْنَ إِلَىٰ كِتَٰبِ ٱللَّهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٌ مِّنْهُمْ وَهُم مُّعْرِضُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவேதத்தில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டவர்களை (நபியே! நீர்) கவனிக்கவில்லையா? அல்லாஹ்வின் வேதத்தின் பக்கம் அது அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பதற்கு அழைக்கப்படுகிறார்கள். பிறகு, அவர்களில் ஒரு பிரிவினர் விலகிவிடுகிறார்கள். அவர்கள் (எப்போதும் சத்தியத்தை) புறக்கணிப்பவர்களே.
Tamil Translation - Omar Sharif(நபியே!) நீர் வேதத்தில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டவர்களை கவனிக்கவில்லையா? அல்லாஹ்வின் வேதத்தின் பக்கம் - அது அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பதற்காக - அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பிறகு, அவர்களில் ஒரு பிரிவினர் (புறக்கணித்து) விலகி செல்கிறார்கள். அவர்கள் (எப்போதும் சத்தியத்தை) புறக்கணிப்பவர்களே.
Tamil Translation - Abdulhamid Baqawi23. (நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்ட (யூதர்களாகிய இ)வர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தைத் தீர்த்து வைக்க அவர்களிடமுள்ள) அல்லாஹ்வின் வேதத்தின் மூலமே தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் இதைப் புறக்கணித்து விலகிக் கொண்டார்கள்.