فَٱسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّى لَآ أُضِيعُ عَمَلَ عَٰمِلٍ مِّنكُم مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ بَعْضُكُم مِّنۢ بَعْضٍ فَٱلَّذِينَ هَاجَرُوا۟ وَأُخْرِجُوا۟ مِن دِيَٰرِهِمْ وَأُوذُوا۟ فِى سَبِيلِى وَقَٰتَلُوا۟ وَقُتِلُوا۟ لَأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَلَأُدْخِلَنَّهُمْ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ثَوَابًا مِّنْ عِندِ ٱللَّهِ وَٱللَّهُ عِندَهُۥ حُسْنُ ٱلثَّوَابِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு பதிலளித்தான், "உங்களில் ஆண் அல்லது பெண்களில் (நற்)செயல் செய்பவரின் (நற்)செயலை நிச்சயம் வீணாக்க மாட்டேன். உங்களில் சிலர், சிலரைச் சேர்ந்தவர்கள்தான். ஹிஜ்ரா சென்றவர்கள், தங்கள் ஊர்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், என் பாதையில் துன்புறுத்தப்பட்டவர்கள், போர் செய்தவர்கள், (அதில்) கொல்லப்பட்டவர்கள், அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயம் அகற்றி விடுவேன். அவற்றின் கீழ் நதிகள் ஓடும் சொர்க்கங்களில் நிச்சயம் அவர்களை நுழைப்பேன்.” அல்லாஹ்விடமிருந்து நற்கூலியாக (இவை வழங்கப்படுவார்கள்). அல்லாஹ், அவனிடத்தில்தான் அழகிய நற்கூலி உண்டு.
Tamil Translation - Omar Sharifஆகவே, “உங்களில் ஆண் அல்லது பெண்களில் (நற்)செயல் செய்பவரின் (நற்)செயலை நிச்சயம் நான் வீணாக்க மாட்டேன். உங்களில் சிலர், சிலரைச் சேர்ந்தவர்கள்தான். ஹிஜ்ரத் சென்றவர்கள், தங்கள் ஊர்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், என் பாதையில் துன்புறுத்தப்பட்டவர்கள், போர் செய்தவர்கள், (அதில்) கொல்லப்பட்டவர்கள், அவர்களுடைய குற்றங்களை அவர்களை விட்டும் நிச்சயம் நான் அகற்றி விடுவேன். அவற்றின் கீழ் நதிகள் ஓடும் சொர்க்கங்களில் நிச்சயம் அவர்களை பிரவேசிக்கச் செய்வேன்.’’ என்று அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு பதிலளி(த்து அவர்களின் பிரார்த்தனைகளை அங்கீகரி)த்தான். அல்லாஹ்விடமிருந்து நற்கூலியாக (இவை அவர்களுக்கு வழங்கப்படும்). இன்னும் அல்லாஹ், அவனிடத்தில்தான் அழகிய நற்கூலி உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi195. ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொண்டதுடன் ‘‘உங்களில் ஆண், பெண் (இரு பாலரிலும்) எவர்கள் நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக நான் அதை வீணாக்கிவிடமாட்டேன். (ஏனென்றால்) உங்களில் (ஆணோ பெண்ணோ) ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தான். (ஆகவே, கூலி கொடுப்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடில்லை. உங்களில்) எவர்கள் தங்கள் ஊரிலிருந்து வெளியேறியும், (பிறரால்) வெளியேற்றப்பட்டும், என் பாதையில் துன்புறுத்தப்பட்டும், போர் செய்து அதில் கொல்லப்பட்டும் (இறந்து) விடுகின்றனரோ அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டு நிச்சயமாக நாம் அகற்றிடுவோம். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் நிச்சயமாக நாம் அவர்களை நுழையவைப்போம்'' (என்று கூறுவான். இது) அல்லாஹ்வினால் (அவர்களுக்குக்) கொடுக்கப்படும் நன்மையாகும். அல்லாஹ்விடத்தில் (இன்னும் இதைவிட) மிக்க அழகான வெகுமதியும் இருக்கிறது.