كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ ٱلْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فَمَن زُحْزِحَ عَنِ ٱلنَّارِ وَأُدْخِلَ ٱلْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا مَتَٰعُ ٱلْغُرُورِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒவ்வோர் ஆன்மாவும் மரணத்தை சுவைக்கக் கூடியதே. உங்கள்கூலிகளை நீங்கள் முழுமையாக நிறைவேற்றப்படுவதெல்லாம் மறுமை நாளில் தான். ஆகவே, எவர் (நரக) நெருப்பிலிருந்து தூரமாக்கப்பட்டு சொர்க்கத்தில் நுழைக்கப்படுகிறாரோ, (அவர்) திட்டமாக வெற்றிபெற்றார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர (வேறு) இல்லை.
Tamil Translation - Omar Sharifஒவ்வோர் ஆன்மாவும் மரணத்தை சுவைக்கக் கூடியதே. இன்னும், உங்கள் கூலிகளை நீங்கள் முழுமையாக கொடுக்கப்படுவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆக, எவர் (நரக) நெருப்பிலிருந்து தூரமாக்கப்பட்டு சொர்க்கத்தில் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவாரோ, (அவர்) திட்டமாக வெற்றி பெற்றார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர (வேறு) இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை.