لَتُبْلَوُنَّ فِىٓ أَمْوَٰلِكُمْ وَأَنفُسِكُمْ وَلَتَسْمَعُنَّ مِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ مِن قَبْلِكُمْ وَمِنَ ٱلَّذِينَ أَشْرَكُوٓا۟ أَذًى كَثِيرًا وَإِن تَصْبِرُوا۟ وَتَتَّقُوا۟ فَإِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ ٱلْأُمُورِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நம்பிக்கையாளர்களே!) உங்கள் செல்வங்களிலும், உங்கள் ஆன்மாக்களிலும் நிச்சயம் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் மூலமும், இணைவைத்து வணங்குபவர்களின் மூலமும் அதிகமான வசை மொழியை நிச்சயம் செவியுறுவீர்கள். நீங்கள் பொறுத்தால், அல்லாஹ்வை அஞ்சினால் நிச்சயமாக அதுதான் உறுதிமிக்க (வீரமிகுந்த) காரியங்களில் உள்ளதாகும்.
Tamil Translation - Omar Sharif(நம்பிக்கையாளர்களே!) உங்கள் செல்வங்களிலும், உங்கள் ஆன்மாக்களிலும் நிச்சயம் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் மூலமும், இணைவைத்து வணங்குபவர்களின் மூலமும் அதிகமான வசை மொழியை (-உங்களை சங்கடப்படுத்தும் பேச்சுகளை) நிச்சயம் நீங்கள் செவியுறுவீர்கள். நீங்கள் பொறுமையாக இருந்தால், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி (பாவங்களை விட்டு விலகி) வாழ்ந்தால் நிச்சயமாக அதுதான் உறுதிமிக்க (வீரமிகுந்த, வெற்றிக்குரிய) காரியங்களில் உள்ளதாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi186. (நம்பிக்கையாளர்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் (நஷ்டம் இழைக்கப்படுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களாலும், இணைவைத்து வணங்குபவர்களாலும், பல வசை மொழிகளை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். (ஆகவே, இத்தகைய சிரமங்களை) நீங்கள் பொறுமையுடன் சகித்தவர்களாகவும், அல்லாஹ்வை பயந்தவர்களாகவும் வாழ்ந்துவந்தால் (நீங்கள் வெற்றியடைவீர்கள்)... நிச்சயமாக இதுதான் வீரச்செயலாக இருக்கும்.