فَٱنقَلَبُوا۟ بِنِعْمَةٍ مِّنَ ٱللَّهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوٓءٌ وَٱتَّبَعُوا۟ رِضْوَٰنَ ٱللَّهِ وَٱللَّهُ ذُو فَضْلٍ عَظِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அல்லாஹ்வின் அருட்கொடை இன்னும் அருளுடன் திரும்பினார்கள். அவர்களை ஒரு தீங்கும் அணுகவில்லை. அல்லாஹ்வின் விருப்பத்தை பின்பற்றினார்கள். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
Tamil Translation - Omar Sharifஆக, அல்லாஹ்வின் கிருபை இன்னும் அருளுடன் அவர்கள் திரும்பினார்கள். அவர்களை ஒரு தீங்கும் அணுகவில்லை. இன்னும் அல்லாஹ்வின் விருப்பத்தை அவர்கள் பின்பற்றினார்கள். அல்லாஹ் (நம்பிக்கையாளர்கள் மீது) மகத்தான அருளுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi174. ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையையும் பாக்கியத்தையும் பெற்றுத் திரும்பி வந்தார்கள். அவர்களை எத்தகைய தீங்கும் அணுகவில்லை. (ஏனென்றால்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தையே பின்பற்றிச் சென்றார்கள். (பொருளை விரும்பிச் செல்லவில்லை.) அல்லாஹ்வோ மகத்தான கொடையுடையவன். (ஆகவே, பொருளையும் அவர்களுக்கு அளித்தான்.)