ٱلَّذِينَ قَالَ لَهُمُ ٱلنَّاسُ إِنَّ ٱلنَّاسَ قَدْ جَمَعُوا۟ لَكُمْ فَٱخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَٰنًا وَقَالُوا۟ حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version"நிச்சயமாக மக்கள் (தங்கள் படைகளையும் ஆயுதங்களையும்) உங்களுக்கு (எதிராக) ஒன்று சேர்த்துள்ளனர், ஆகவே, அவர்களைப் பயப்படுங்கள்" என்று (சில) மக்கள் அவர்களுக்கு கூறினர். (அது) அவர்களுக்கு நம்பிக்கையை(த்தான்) அதிகப்படுத்தியது. "அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன், அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்றும் கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharif(-அந்த உண்மையான நம்பிக்கையாளர்கள்,) மக்கள் அவர்களுக்கு கூறினர்: “நிச்சயமாக மக்கள் (தங்கள் படைகளையும் ஆயுதங்களையும்) உங்களுக்காக (-உங்களை எதிர்ப்பதற்காக) திட்டமாக ஒன்று சேர்த்துள்ளனர், ஆகவே, அவர்களைப் பயப்படுங்கள்! (அவர்களுடன் போருக்கு சென்று விடாதீர்கள்!)’’ ஆனால், இந்த அச்சுறுத்தலோ அவர்களுக்கு நம்பிக்கையை(த்தான் மேலும்) அதிகப்படுத்தியது. இன்னும், “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன், அவன் சிறந்த பொறுப்பாளன்’’ என்று அவர்கள் (நம்பிக்கையுடன்) கூறினார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi173. (சில) மக்கள் அவர்களிடம் (வந்து) ‘‘உங்களுக்கு எதிராக (போர்புரிய) எல்லா வகுப்பினரும் நிச்சயமாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர் (ஆதலால்,) அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்'' என்று கூறிய சமயத்தில், அவர்களுக்கு (பயம் ஏற்படுவதற்குப் பதிலாக) நம்பிக்கையே அதிகரித்தது. மேலும், ‘‘அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவன் (பாதுகாவலன்)'' என்றும் கூறினார்கள்.