زُيِّنَ لِلنَّاسِ حُبُّ ٱلشَّهَوَٰتِ مِنَ ٱلنِّسَآءِ وَٱلْبَنِينَ وَٱلْقَنَٰطِيرِ ٱلْمُقَنطَرَةِ مِنَ ٱلذَّهَبِ وَٱلْفِضَّةِ وَٱلْخَيْلِ ٱلْمُسَوَّمَةِ وَٱلْأَنْعَٰمِ وَٱلْحَرْثِ ذَٰلِكَ مَتَٰعُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَٱللَّهُ عِندَهُۥ حُسْنُ ٱلْمَـَٔابِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளியின் குவிக்கப்பட்ட (பெரும்) குவியல்கள், அடையாளமிடப்பட்ட (அழகிய) குதிரைகள், கால்நடைகள், விளைநிலம் ஆகிய விருப்பங்களை நேசிப்பது மக்களுக்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவை (அனைத்தும் அற்ப) உலக வாழ்வின் (சொற்ப) இன்பமாகும்! அல்லாஹ், அவனிடம்தான் (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு.
Tamil Translation - Omar Sharifபெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளியின் குவிக்கப்பட்ட (பெரும்) குவியல்கள், அடையாளமிடப்பட்ட (உயர் ரக அழகிய) குதிரைகள், கால்நடைகள், விளைநிலம் ஆகிய ஆசைகளின் விருப்பம் மக்களுக்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவை (அனைத்தும் அற்ப) உலக வாழ்க்கையின் (சொற்ப) இன்பமாகும்! அல்லாஹ் - அவனிடம்தான் (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi14. பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளிகளின் பெரும் குவியல்கள், உயர்ந்த குதிரைகள் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகள், பயிர் நிலங்கள் ஆகியவற்றை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. எனினும் இவை (அனைத்தும் நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்களே! அல்லாஹ்விடத்திலோ (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு.