قَدْ كَانَ لَكُمْ ءَايَةٌ فِى فِئَتَيْنِ ٱلْتَقَتَا فِئَةٌ تُقَٰتِلُ فِى سَبِيلِ ٱللَّهِ وَأُخْرَىٰ كَافِرَةٌ يَرَوْنَهُم مِّثْلَيْهِمْ رَأْىَ ٱلْعَيْنِ وَٱللَّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِۦ مَن يَشَآءُ إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّأُو۟لِى ٱلْأَبْصَٰرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(பத்ரு போரில்) சந்தித்த இரு கூட்டங்களில் திட்டமாக உங்களுக்கோர் அத்தாட்சி இருந்தது. ஒரு கூட்டம் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறது, மற்றொன்று நிராகரிக்கக்கூடியது. இவர்களை அ(ல்லாஹ்வின் பாதையில் போர் புரிப)வர்கள் தங்களைப் போன்று இரு மடங்குகளாக கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் நாடியவர்களைத் தன் உதவியால் பலப்படுத்துகிறான். (படிப்பினை பெறும்) பார்வையுடையோருக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை திட்டமாக இருக்கிறது.
Tamil Translation - Omar Sharif(பத்ர் போரில்) சந்தித்த இரு கூட்டங்களில் திட்டமாக உங்களுக்கு ஓர் அத்தாட்சி இருந்தது. ஒரு கூட்டம் (நம்பிக்கைக் கொண்டு) அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறது, மற்றொரு கூட்டம் (அல்லாஹ்வை) நிராகரிக்கக்கூடியது. (அதிக எண்ணிக்கையில் இருந்த) இவர்களை அ(ல்லாஹ்வின் பாதையில் போர் புரிப)வர்கள் தங்களைப் போன்று இரு மடங்குகளாக (மட்டும்) கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் நாடியவர்களைத் தனது உதவியால் பலப்படுத்துகிறான். (படிப்பினை பெறும்) பார்வையுடையோருக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை திட்டமாக இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi13. (பத்ரு போர்க்களத்தில்) சந்தித்த இரு சேனைகளில் மெய்யாகவே உங்களுக்கு ஓர் அத்தாட்சி இருந்தது. (ஒன்று) அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் கூட்டம், மற்றொரு கூட்டத்தினர் நிராகரிப்பவர்கள். (நிராகரிப்பவர்கள் ஆகிய) இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களை தங்களைவிட இரு மடங்காக(த் தங்கள்) கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் விரும்பியவர்களைத் தன் உதவியைக் கொண்டு (இவ்வாறு) பலப்படுத்துகிறான். (படிப்பினை பெறும்) பார்வையுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கிறது.