قُل لِّلَّذِينَ كَفَرُوا۟ سَتُغْلَبُونَ وَتُحْشَرُونَ إِلَىٰ جَهَنَّمَ وَبِئْسَ ٱلْمِهَادُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரிப்பாளர்களுக்கு (நபியே!) கூறுவீராக: "(நீங்கள்) வெற்றி கொள்ளப்படுவீர்கள். இன்னும் (மறுமையில்) ஜஹன்னம் (-நரகத்தின்) பக்கம் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். (அந்த) தங்குமிடம் மிகக் கெட்டுவிட்டது."
Tamil Translation - Omar Sharif(நபியே!) நிராகரிப்பாளர்களுக்கு கூறுவீராக: “(நீங்கள்) வெற்றி கொள்ளப்படுவீர்கள். இன்னும், (நீங்கள் இறந்த பின்னர் மறுமையில்) ஜஹன்னம் (-நரகத்தின்) பக்கம் ஒன்று திரட்டப்படுவீர்கள். அது தங்குமிடத்தால் மிகக் கெட்டது.’’
Tamil Translation - Abdulhamid Baqawi12. எவர்கள் இவ்வேதத்தை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘அதிசீக்கிரத்தில் நீங்கள் வெற்றி கொள்ளப்படுவீர்கள். மேலும், (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். அது மிகக்கெட்ட தங்குமிடமாகும்.''