وَٱعْتَصِمُوا۟ بِحَبْلِ ٱللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا۟ وَٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَآءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِۦٓ إِخْوَٰنًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ ٱلنَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅனைவரும் அல்லாஹ்வின் (வேதம் எனும்) கயிற்றைப் பற்றிப் பிடியுங்கள்; பிரிந்து விடாதீர்கள்; உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூருங்கள். நீங்கள் எதிரிகளாக இருந்தபோது உங்கள் உள்ளங்களுக்கு மத்தியில் (இஸ்லாமின் மூலம்) இணக்கத்தை ஏற்படுத்தினான். ஆகவே, அவனுடைய அருட்கொடையால் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்னர்) நரகத்தின் ஒரு குழியின் ஓரத்தில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களை காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அனைவரும் அல்லாஹ்வின் (வேதம் எனும்) கயிற்றைப் பற்றிப் பிடியுங்கள்; இன்னும், பிரிந்து விடாதீர்கள்; இன்னும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூருங்கள். நீங்கள் எதிரிகளாக இருந்தபோது உங்கள் உள்ளங்களுக்கிடையில் (இஸ்லாமின் மூலம்) அல்லாஹ் இணக்கத்தை ஏற்படுத்தினான். ஆகவே, அவனுடைய அருட்கொடையால் நீங்கள் சகோதரர்களாக ஆகிவிட்டீர்கள். (அதற்கு முன்னர்) நரகக் குழியின் ஓரத்தில் இருந்தீர்கள். ஆக, அதிலிருந்து உங்களை அவன் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi103. மேலும், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்திட வேண்டாம். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) எதிரிகளாக(ப் பிரிந்து) இருந்த சமயத்தில் உங்கள் உள்ளங்களுக்குள் (இஸ்லாமின் மூலம்) அன்பை ஊட்டி ஒன்று சேர்த்தான். ஆகவே, அல்லாஹ்வின் அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக்கிடங்கிற்கு அருகில் இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களை காப்பாற்றிக் கொண்டான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இப்படி தெளிவுபடுத்திக் காண்பிக்கிறான்.