إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَن تُغْنِىَ عَنْهُمْ أَمْوَٰلُهُمْ وَلَآ أَوْلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيْـًٔا وَأُو۟لَٰٓئِكَ هُمْ وَقُودُ ٱلنَّارِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நிராகரிப்பாளர்கள் அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்விடம் (உள்ள தண்டனையிலிருந்து) எதையும் அவர்களை விட்டும் அறவே தடுக்காது. அவர்கள்தான் நரகத்தின் எரிபொருள்கள்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்விடம் (உள்ள தண்டனையிலிருந்து) எதையும் அவர்களை விட்டு அறவே தடுக்காது. இன்னும், அவர்கள்தான் நரகத்தின் எரிபொருள்கள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi10. நிச்சயமாக எவர்கள் (அந்நாளை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு (அந்நாளில்) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து எதையும் அறவே தவிர்த்துவிட முடியாது. இவர்கள்தான் (உண்மையாகவே) நரகத்தின் எரிகட்டைகள்.