caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 11

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:11

كَدَأْبِ ءَالِ فِرْعَوْنَ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمْ وَٱللَّهُ شَدِيدُ ٱلْعِقَابِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இவர்களின் தன்மை) ஃபிர்அவ்னுடைய கூட்டத்தார் இன்னும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் தன்மையைப் போன்றுதான். (அவர்கள்) நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள். எனவே, அல்லாஹ் அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடித்தான். அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்.
Tamil Translation - Omar Sharif(இவர்களின் தன்மை) ஃபிர்அவ்னுடைய கூட்டத்தார் இன்னும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் தன்மையைப் போன்றுதான். அவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை தண்டித்தான். அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. (இவர்களின் நிலை) ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு முன் இருந்தவர்களின் நிலை போன்று உள்ளது. அவர்களும் நம் வசனங்களைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், அல்லாஹ் அவர்களின் (இப்)பாவங்களின் காரணமாக அவர்களை தண்டித்தான். அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70