قُلْ كَفَىٰ بِٱللَّهِ بَيْنِى وَبَيْنَكُمْ شَهِيدًا يَعْلَمُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱلْبَٰطِلِ وَكَفَرُوا۟ بِٱللَّهِ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْخَٰسِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வே சாட்சியால் போதுமானவன். வானங்கள் இன்னும் பூமியில் உள்ளவற்றை அவன் நன்கறிவான். பொய்யை நம்பிக்கை கொண்டவர்கள் இன்னும் அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! எனக்கும் உங்களுக்கும் இடையில் சாட்சியால் அல்லாஹ்வே போதுமானவன். வானங்கள் இன்னும் பூமியில் உள்ளவற்றை அவன் நன்கறிவான். இன்னும், பொய்யை நம்பிக்கை கொண்டவர்களும் அல்லாஹ்வை நிராகரித்தவர்களும் அவர்கள்தான் நஷ்டவாளிகள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi52. (நபியே!) கூறுவீராக: ‘‘ எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கிறான். ஏனென்றால், அவன்தான் வானங்கள் பூமியிலுள்ள அனைத்தையும் நன்கறிந்தவன். ஆகவே, எவர்கள் பொய்யான விஷயங்களை நம்பி அல்லாஹ்வை நிராகரித்து விடுகிறார்களோ அவர்கள்தான் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள்.''