وَيَسْتَعْجِلُونَكَ بِٱلْعَذَابِ وَلَوْلَآ أَجَلٌ مُّسَمًّى لَّجَآءَهُمُ ٱلْعَذَابُ وَلَيَأْتِيَنَّهُم بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் உம்மிடம் தண்டனையை அவசரமாகக் கேட்கின்றனர். குறிப்பிடப்பட்ட ஒரு தவணை இல்லை என்றால் நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை வந்தே இருக்கும். இன்னும் அவர்கள் உணராதவர்களாக இருக்க, அவர்களிடம் (அது) திடீர் என வரும்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் உம்மிடம் தண்டனையை அவசரமாகக் கேட்கிறார்கள். (தண்டனைக்கான) தவணை குறிப்பிடப்பட்டதாக இல்லை என்றால் அவர்களுக்கு தண்டனை (உடனே) வந்திருக்கும். அவர்கள் உணராதவர்களாக இருக்கும் நிலையில் நிச்சயமாக அவர்களிடம் அ(ந்த தண்டனையான)து திடீரென வரும்.
Tamil Translation - Abdulhamid Baqawi53. (மறுமையின்) வேதனையைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என்று) அவர்கள் உம்மிடம் அவசரப்படுகின்றனர். அதற்குறிய ஒரு குறிப்பிட்ட தவணை இல்லாதிருந்தால் (இதுவரை) அவ்வேதனை அவர்களை வந்தடைந்தே இருக்கும். எனினும், அவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் திடீரென நிச்சயமாக அவர்களிடம் (அது) வந்தே தீரும்.