أَوَلَمْ يَكْفِهِمْ أَنَّآ أَنزَلْنَا عَلَيْكَ ٱلْكِتَٰبَ يُتْلَىٰ عَلَيْهِمْ إِنَّ فِى ذَٰلِكَ لَرَحْمَةً وَذِكْرَىٰ لِقَوْمٍ يُؤْمِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் மீது ஓதப்படுகின்ற இந்த வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியது அவர்களுக்கு போதுமாகாதா? நிச்சயமாக நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு இதில் அருளும் அறிவுரையும் இருக்கின்றன.
Tamil Translation - Omar Sharif(அவர்கள் கேட்கும் அத்தாட்சியை விட) இந்த வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கி இருப்பது அவர்களுக்கு போதாதா? இது அவர்கள் மீது ஓதி காண்பிக்கப்படுகிறதே! நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் அருளும் அறிவுரையும் இருக்கின்றன.
Tamil Translation - Abdulhamid Baqawi51. அவர்கள் மீது ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கி இருப்பது அவர்களுக்கு (அத்தாட்சியால்) போதாதா? ஏனென்றால், இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக (இறைவனுடைய) அருளும் இருக்கிறது; (பல) நல்லுபதேசங்களும் இருக்கின்றன.