caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ankaboot அத்தியாயம், வசனம் 19

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 85 · 29:19

أَوَلَمْ يَرَوْا۟ كَيْفَ يُبْدِئُ ٱللَّهُ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥٓ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் படைப்புகளை ஆரம்பமாக எப்படி படைத்தான், பிறகு அவற்றை அவன் (எவ்வாறு) மீண்டும் உருவாக்குகிறான் என்பதை அவர்கள் (சிந்தித்துப்) பார்க்கவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு இலகுவானதாகும்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் படைப்புகளை ஆரம்பமாக எப்படி படைத்தான் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? பிறகு (இறந்த பின்னர் மறுமை நிகழும்போது) அவன் அவர்களை மீண்டும் உருவாக்குவான். நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு இலகுவானதாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. (ஒன்றுமில்லாதிருந்த) படைப்புகளை அல்லாஹ் எவ்வாறு ஆரம்பத்தில் வெளியாக்கினான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (அவ்வாறே மரணித்த) பின்னரும் அவற்றை மீளவைப்பான். நிச்சயமாக இ(வ்வாறு செய்வ)து அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே!'' (என்று கூறினார்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70