caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ankaboot அத்தியாயம், வசனம் 20

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 85 · 29:20

قُلْ سِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟ كَيْفَ بَدَأَ ٱلْخَلْقَ ثُمَّ ٱللَّهُ يُنشِئُ ٱلنَّشْأَةَ ٱلْـَٔاخِرَةَ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! நீங்கள் பூமியில் சுற்றுங்கள்! அவன் (-அல்லாஹ்) படைப்புகளை எப்படி ஆரம்பித்தான் (ஆரம்பத்தில் எப்படி படைத்தான்) என்று பாருங்கள்! பிறகு, அல்லாஹ் மற்றொரு முறை (அவற்றை) உருவாக்குவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உள்ளவன்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! நீங்கள் பூமியில் சுற்றுங்கள்! ஆக, (அல்லாஹ்) படைப்புகளை படைப்பதை எப்படி ஆரம்பித்தான் என்று பாருங்கள்! பிறகு, அல்லாஹ் மற்றொரு முறை (அவற்றை) உருவாக்குவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உள்ளவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi20. (மேலும், மனிதர்களை நோக்கிக் கூறும்படி இப்றாஹீமுக்கு கட்டளையிட்டோம்.) கூறுவீராக! பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள். ஆரம்பத்தில் படைப்புகளை எவ்வாறு உற்பத்தி செய்கிறான். (அவ்வாறே மரணித்த) பின்னரும் அல்லாஹ் (மறுமையில்) மறுமுறையும் உற்பத்தி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுள்ளவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70