إِنَّ ٱلَّذِى فَرَضَ عَلَيْكَ ٱلْقُرْءَانَ لَرَآدُّكَ إِلَىٰ مَعَادٍ قُل رَّبِّىٓ أَعْلَمُ مَن جَآءَ بِٱلْهُدَىٰ وَمَنْ هُوَ فِى ضَلَٰلٍ مُّبِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக உம்மீது குர்ஆனை இறக்கியவன் உம்மை (உமது) வழமைக்கு (இயல்பான மரணத்திற்கு அல்லது நீர் பிறந்து வளர்ந்த மக்காவிற்கு) திரும்பக் கொண்டு வருவான். (நபியே!) கூறுவீராக! “நேர்வழியைக் கொண்டு வந்தவரையும் தெளிவான வழிகேட்டில் இருப்பவரையும் என் இறைவன் மிக அறிந்தவன்.”
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக உம்மீது குர்ஆனை இறக்கியவன் உம்மை (உமது) மீளுமிடத்திற்கு[1] திரும்பக் கொண்டு வருவான். (நபியே!) கூறுவீராக! “நேர்வழியைக் கொண்டு வந்தவரையும் தெளிவான வழிகேட்டில் இருப்பவரையும் என் இறைவன் மிக அறிந்தவன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi85. (நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனின் கட்டளைகளை உம் மீது விதித்து இருக்கிறானோ அவன் நிச்சயமாக உம்மை (மக்காவாகிய) உமது இல்லத்தில் திரும்பச் சேர்த்து வைப்பான். ஆகவே, (நபியே!) கூறுவீராக: நேரான வழியைக் கொண்டு வந்தவர் யார்? (அதை மறுத்துப்) பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர் யார்? என்பதை என் இறைவன் நன்கறிவான்.