caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 82

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:82

وَأَصْبَحَ ٱلَّذِينَ تَمَنَّوْا۟ مَكَانَهُۥ بِٱلْأَمْسِ يَقُولُونَ وَيْكَأَنَّ ٱللَّهَ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ وَيَقْدِرُ لَوْلَآ أَن مَّنَّ ٱللَّهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا وَيْكَأَنَّهُۥ لَا يُفْلِحُ ٱلْكَٰفِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநேற்று அவனுடைய இடத்தை (-தகுதியை) ஆசைப்பட்டவர்கள் காலையில் கூறினர்: பார்க்கவில்லையா! நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களில் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகின்றான். (தான் நாடியவர்களுக்கு) சுருக்கி விடுகிறான். அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்க வில்லையென்றால் அவன் நம்மையும் (பூமியில்) சொருகியிருப்பான். பார்க்க வில்லையா! நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நேற்று அவனுடைய இடத்தை (-அவனைப் போன்று ஆகவேண்டுமென) ஆசைப்பட்டவர்கள் காலையில் கூறினார்கள்: “நாம் பார்க்கவில்லையா, நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களில் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகிறான். (தான் நாடியவர்களுக்கு) சுருக்கி விடுகிறான். அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்கவில்லை என்றால் அவன் நம்மையும் (பூமியில்) சொருகியிருப்பான். நாம் பார்க்கவில்லையா, நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi82. நேற்றைய தினம் அவனுடைய பதவியை விரும்பியவர்களெல்லாம் (அவனும், அவனுடைய மாளிகையும் பூமியில் சொருகிப்போனதைக் கண்ணுற்றதும் திடுக்கிட்டு நாணமுற்று) என்ன நேர்ந்தது! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கிறான்; (அவன் விரும்பியவர்களுக்கு) குறைத்தும் விடுகிறான் என்றும், (மனிதனுடைய சாமர்த்தியத்தால் மட்டும் ஒன்றும் ஆவதில்லை என்றும்) தெரிகின்றதே! அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்காவிடில் அவ்வாறே நம்மையும் பூமியில் சொருகி இருப்பான். (என்று கூறினர். பிறகு திடுக்கிட்டு, நாணமுற்று) என்ன நேர்ந்தது! நிச்சயமாக (இறைவனின் அருட்கொடையை மறுக்கும்) நன்றி கெட்டவர்கள் வெற்றி அடையவே மாட்டார்கள் என்று தெரிகின்றதே! என்று கூற ஆரம்பித்தார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70