تِلْكَ ٱلدَّارُ ٱلْـَٔاخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّا فِى ٱلْأَرْضِ وَلَا فَسَادًا وَٱلْعَٰقِبَةُ لِلْمُتَّقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅந்த மறுமை இல்லமானது - பூமியில் அநியாயத்தையோ குழப்பத்தையோ விரும்பாதவர்களுக்கு அதை நாம் ஆக்குவோம். முடிவான நற்பாக்கியம் இறையச்சமுடையவர்களுக்குத்தான் உண்டு.
Tamil Translation - Omar Sharif(இன்பங்கள் நிறைந்த சொர்க்கமாகிய) அதுதான் மறுமை இல்லமாகும். எவர்கள் பூமியில் அநியாயத்தையோ (அராஜகத்தையோ,) கெடுதியையோ விரும்பவில்லையோ அவர்களுக்கு அதை நாம் ஆக்குவோம். முடிவான நற்பாக்கியம் இறையச்சமுடையவர்களுக்குத்தான் உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi83. (மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ, பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். முடிவான நற்பாக்கியம் இறையச்சம் உடையவர்களுக்குத்தான் உண்டு.