caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 57

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:57

وَقَالُوٓا۟ إِن نَّتَّبِعِ ٱلْهُدَىٰ مَعَكَ نُتَخَطَّفْ مِنْ أَرْضِنَآ أَوَلَمْ نُمَكِّن لَّهُمْ حَرَمًا ءَامِنًا يُجْبَىٰٓ إِلَيْهِ ثَمَرَٰتُ كُلِّ شَىْءٍ رِّزْقًا مِّن لَّدُنَّا وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கூறினர்: “நாம் உம்முடன் நேர்வழியை பின்பற்றினால் நாங்கள் எங்கள் பூமியிலிருந்து (உடனே) வெளியேற்றப்பட்டிருப்போம்.” (அவர்கள் சொல்வது பொய்.) நாம் அவர்களுக்கு பாதுகாப்பான புனித தலத்தை ஸ்திரப்படுத்தித் தரவில்லையா? எல்லா வகையான கனிகளும் நம் புறத்திலிருந்து உணவாக அங்கு கொண்டு வரப்படுகின்றன. என்றாலும் அவர்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் கூறினார்கள்: “நாம் உம்முடன் நேர்வழியை பின்பற்றினால் எங்கள் பூமியிலிருந்து (உடனே எங்கள் எதிரிகளால்) நாங்கள் வெளியேற்றப்பட்டிருப்போம்.” (இவ்வாறு அவர்கள் சொல்வது பொய்.) நாம் அவர்களுக்காக பாதுகாப்பான புனித தலத்தை ஸ்திரப்படுத்தித் தரவில்லையா? எல்லா வகையான கனிகளும் நம் புறத்திலிருந்து உணவாக அங்கு கொண்டு வரப்படுகின்றன. என்றாலும், அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் அருட்கொடையின் மதிப்பை) அறியமாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi57. (நபியே! மக்காவாசிகளான) இவர்கள் (உம்மை நோக்கி) ‘‘ நாங்கள் உம்முடன் இந்த குர்ஆனைப் பின்பற்றினால், எங்கள் ஊரில் இருந்த நாங்கள் (இறாய்ஞ்சித்) தூக்கிச் செல்லப்பட்டு விடுவோம்'' என்று கூறுகின்றனர். (இவர்கள் சிந்திக்க வேண்டாமா?) அபயமளிக்கும் மிக்க கண்ணியமான இடத்தில் (இவர்கள் வசித்திருக்க) இவர்களுக்கு நாம் வசதி அளிக்கவில்லையா? ஒவ்வொரு கனிவர்க்கமும் உணவாக நம்மிடமிருந்து அங்கு வந்து குவிந்து கொண்டே இருக்கிறது. எனினும், இவர்களில் பெரும்பாலானவர்கள் (இதன் நன்றியை) அறிய மாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70