caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 56

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:56

إِنَّكَ لَا تَهْدِى مَنْ أَحْبَبْتَ وَلَٰكِنَّ ٱللَّهَ يَهْدِى مَن يَشَآءُ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நீர் விரும்பியவரை நேர்வழி செலுத்த மாட்டீர். (அது உம்மால் முடியாது.) என்றாலும் அல்லாஹ் தான் நாடியவரை நேர்வழி செலுத்துகின்றான். அவன்தான் நேர்வழி செல்பவர்களை மிக அறிந்தவன்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) நிச்சயமாக நீர் விரும்பிய நபரை நீர் நேர்வழி செலுத்த முடியாது. என்றாலும், அல்லாஹ், எவரை நாடுகிறானோ அவரை நேர்வழி செலுத்துகிறான். இன்னும், அவன்தான் நேர்வழி செல்பவர்களை மிக அறிந்தவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi56. (நபியே!) நிச்சயமாக இவர்களில் நீர் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உம்மால் முடியாது. எனினும் அல்லாஹ், தான் விரும்பியவர்களை(த்தான்) நேரான வழியில் செலுத்துகிறான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70