caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 58

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:58

وَكَمْ أَهْلَكْنَا مِن قَرْيَةٍۭ بَطِرَتْ مَعِيشَتَهَا فَتِلْكَ مَسَٰكِنُهُمْ لَمْ تُسْكَن مِّنۢ بَعْدِهِمْ إِلَّا قَلِيلًا وَكُنَّا نَحْنُ ٱلْوَٰرِثِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎத்தனையோ ஊர்களை நாம் அழித்தோம். அவர்கள் தங்களது வாழ்க்கை வசதியால் வரம்பு மீறி நிராகரித்தனர். இதோ அவர்களது இல்லங்கள் அவர்களுக்கு பின்னர் குறைவாகவே தவிர (பிற மக்களால்) வசிக்கப்படவில்லை. நாமே (அனைத்திற்கும்) வாரிசுகளாக (சொந்தக்காரர்களாக) இருக்கின்றோம்.
Tamil Translation - Omar Sharifஎத்தனையோ ஊர்களை நாம் அழித்தோம். அவர்கள் தங்களது (வசதியான) வாழ்க்கையால் எல்லை மீறி நிராகரித்தனர். இதோ அவர்களது இல்லங்கள் அவர்களுக்கு பின்னர் குறைவாகவே தவிர வசிக்கப்படாமல் இருக்கின்றன. நாமே (அனைத்திற்கும்) வாரிசுகளாக (உண்மையான உரிமையாளர்களாக) இருக்கிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi58. (இவர்களைப் போன்று) தன் வாழ்க்கைத் தரத்தால் கொழுத்துத் திமிர் பிடித்த எத்தனையோ ஊரார்களை நாம் அழித்திருக்கிறோம். இதோ! (பாருங்கள்.) இவை அனைத்தும் அவர்கள் வசித்திருந்த இடங்கள்தான். சொற்ப இடங்களைத் தவிர அவற்றில் பல அவர்களுக்குப் பின்னர் வசிக்கப்படவில்லை. நாம்தான் (அவற்றுக்கு) வாரிசுகளாக இருக்கிறோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70