caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:5

وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى ٱلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟ فِى ٱلْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ ٱلْوَٰرِثِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் பூமியில் பலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீது நாம் அருள்புரிவதற்கும் அவர்களை அரசர்களாக நாம் ஆக்குவதற்கும் அவர்களை (ஃபிர்அவ்னின்) வாரிசுகளாக (-ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்டதன் பின்னர் அவனுடைய பூமிக்கும் சொத்துகளுக்கும் சொந்தக்காரர்களாக) நாம் ஆக்குவதற்கும் நாடினோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், பூமியில் பலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீது நாம் அருள்புரிவதற்கும் அவர்களை ஆட்சியாளர்களாக நாம் ஆக்குவதற்கும் (ஃபிர்அவ்னும் அவனுடைய சமுதாயமும் அழிக்கப்பட்டதன் பின்னர் அவர்களின் பூமிக்கும் சொத்துகளுக்கும்) சொந்தக்காரர்களாக அவர்களை நாம் ஆக்குவதற்கும் நாடினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. எனினும், பூமியில் (அவனால்) பலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீது நாம் அருள் புரிந்து, அவர்களைத் தலைவர்களாக்கி (அங்கு வசித்தவர்களுடைய பொருள்களுக்கும்,) அவர்களையே வாரிசுகளாக ஆக்க விரும்பினோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70