إِنَّ فِرْعَوْنَ عَلَا فِى ٱلْأَرْضِ وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَآئِفَةً مِّنْهُمْ يُذَبِّحُ أَبْنَآءَهُمْ وَيَسْتَحْىِۦ نِسَآءَهُمْ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلْمُفْسِدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக ஃபிர்அவ்ன் (எகிப்து) பூமியில் (மக்களை) பலவந்தப்படுத்தினான். அங்குள்ளவர்களை பல பிரிவுகளாக ஆக்கினான். அவர்களில் ஒரு வகுப்பாரை பலவீனப்படுத்தி (அவர்களை துன்புறுத்தி)னான். அவர்களின் ஆண் பிள்ளைகளைக் கொன்றான். அவர்களின் பெண் (பிள்ளை)களை வாழவிட்டான். நிச்சயமாக அவன் கெட்டவர்களில் ஒருவனாக இருந்தான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக ஃபிர்அவ்ன் (எகிப்து) பூமியில் (மக்களை அடக்கி ஆண்டு) பெருமையடித்(து வந்)தான். இன்னும், அங்குள்ளவர்களை பல பிரிவுகளாக ஆக்கினான். அவர்களில் ஒரு வகுப்பாரை (-இஸ்ரவேலர்களை) பலவீனப்படுத்தி (அவர்களை துன்புறுத்தி)னான். அவர்களின் ஆண் பிள்ளைகளை அவன் கொல்வான். இன்னும், அவர்களின் பெண் (பிள்ளை)களை வாழவிடுவான். நிச்சயமாக அவன் கெடுதி செய்வோரில் ஒருவனாக இருந்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. நிச்சயமாக ஃபிர்அவ்ன், பூமியில் மிகவும் பெருமை கொண்டு, அதில் உள்ளவர்களைப் பல வகுப்புக்களாகப் பிரித்து, அவர்களில் ஒரு பிரிவினரை பலவீனப்படுத்தும் பொருட்டு அவர்களுடைய ஆண் மக்களைக் கொலை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழவைத்து வந்தான். மெய்யாகவே (இவ்வாறு) அவன் விஷமிகளில் ஒருவனாகவே இருந்தான்.