وَنُمَكِّنَ لَهُمْ فِى ٱلْأَرْضِ وَنُرِىَ فِرْعَوْنَ وَهَٰمَٰنَ وَجُنُودَهُمَا مِنْهُم مَّا كَانُوا۟ يَحْذَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் (அவனுடைய) பூமியில் அவர்களுக்கு நாம் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ஃபிர்அவ்ன், ஹாமான், இன்னும் அவ்விருவரின் இராணுவங்களுக்கு அவர்கள் மூலமாக (-இஸ்ரவேலர்கள் மூலமாக) அவர்கள் அச்சப்பட்டுக் கொண்டு இருந்ததை நாம் காண்பிப்பதற்கும் (நாடினோம்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், பூமியில் அவர்களுக்கு நாம் (மக்கள் மீது ஆட்சி செய்கிற) ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கும்; ஃபிர்அவ்ன், ஹாமான், இன்னும் அவ்விருவரின் இராணுவங்களுக்கு அவர்கள் (-இஸ்ரவேலர்கள்) மூலமாக அச்சப்பட்டுக் கொண்டிருந்ததை நாம் காண்பிப்பதற்கும் நாடினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. அப்பூமியில் நாம் (பலவீனமான) அவர்களை மேன்மையாக்கி வைத்து ஃபிர்அவ்னும், ஹாமானும், அவர்களுடைய ராணுவங்களும் எந்த வேதனைக்குப் பயந்து கொண்டிருந்தார்களோ, அதை அவர்களுக்குக் காண்பிக்கவும் நாம் கருதினோம்.