caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 48

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:48

فَلَمَّا جَآءَهُمُ ٱلْحَقُّ مِنْ عِندِنَا قَالُوا۟ لَوْلَآ أُوتِىَ مِثْلَ مَآ أُوتِىَ مُوسَىٰٓ أَوَلَمْ يَكْفُرُوا۟ بِمَآ أُوتِىَ مُوسَىٰ مِن قَبْلُ قَالُوا۟ سِحْرَانِ تَظَٰهَرَا وَقَالُوٓا۟ إِنَّا بِكُلٍّ كَٰفِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்மிடமிருந்து சத்திய தூதர் அவர்களுக்கு வந்தபோது, அவர் (-அந்த தூதர்) மூஸாவிற்கு வழங்கப்பட்டதை (-மூஸாவின் வேதம்) போன்ற (வேதம் அவருக்கும்) வழங்கப்பட்டிருக்க வேண்டாமா! என்று கூறினர். இதற்கு முன்னர் மூஸாவிற்கு வழங்கப்பட்டதை இவர்கள் (-இந்த யூதர்கள்) மறுக்கவில்லையா? அவர்கள் (அந்த யூதர்கள்) கூறினர்: (மூஸாவின் வேதமும் ஈஸாவின் வேதமும் இவை இரண்டும்) தங்களுக்குள் உதவி செய்த இரண்டு சூனியங்களாகும். (உமக்கு வேதம் வழங்கப்பட்ட பின்னர்) அவர்கள் கூறினர்: நிச்சயமாக நாங்கள் (மூஸா, ஈஸா, முஹம்மது ஆகியோரின் வேதங்கள்) அனைத்தையும் மறுப்பவர்கள்தான்.
Tamil Translation - Omar Sharifஆக, நம்மிடமிருந்து சத்திய தூதர் அவர்களுக்கு வந்தபோது, “மூஸாவிற்கு வழங்கப்பட்ட(வேதத்)தை போன்று (ஒரு வேதம் அவருக்கும்) வழங்கப்பட்டிருக்க வேண்டாமா!” என்று கூறினார்கள். இதற்கு முன்னர் மூஸாவிற்கு வழங்கப்பட்டதை இவர்கள் (-இந்த யூதர்கள்) மறுக்கவில்லையா? (மேலும், அந்த யூதர்கள்) கூறினார்கள்: (மூஸாவின் வேதமும் ஈஸாவின் வேதமும் இவை இரண்டும்) தங்களுக்குள் உதவி செய்த இரண்டு சூனியங்களாகும். இன்னும், (உமக்கு இந்த வேதம் வழங்கப்பட்ட பின்னர்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் (இந்த பூமியில் இறக்கப்பட்ட வேதங்கள்) அனைத்தையும் மறுப்பவர்கள் ஆவோம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi48. எனினும், இத்தகைய உண்மை (விஷயங்களையுடைய சத்திய வேதம்) நம்மிடமிருந்து இவர்களிடம் வந்த சமயத்தில் (இதை நம்பிக்கை கொள்வதற்குப் பதிலாக) இவர்கள் ‘‘ மூஸாவுக்கு கொடுக்கப்பட்ட அற்புதங்களைப் போல் இவருக்கும் கொடுக்கப்பட வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். (என்னே!) இதற்கு முன்னர் மூஸாவுக்குக் கொடுக்கப்பட்ட அற்புதங்களையும் இவர்(களின் மூதாதை)கள் நிராகரித்து விடவில்லையா? ‘‘ (மூஸாவும், ஹாரூனும்) ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் சூனியக்காரர்கள் என்று இவர்கள் கூறியதுடன், நிச்சயமாக நாங்கள் இவ்விருவரையும் நிராகரித்து விட்டோம்'' என்றும் கூறினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70