caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 32

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:32

ٱسْلُكْ يَدَكَ فِى جَيْبِكَ تَخْرُجْ بَيْضَآءَ مِنْ غَيْرِ سُوٓءٍ وَٱضْمُمْ إِلَيْكَ جَنَاحَكَ مِنَ ٱلرَّهْبِ فَذَٰنِكَ بُرْهَٰنَانِ مِن رَّبِّكَ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦٓ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًا فَٰسِقِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது குறை இன்றி (மின்னும்) வெண்மையாக வெளிவரும். (பாம்பைப் பார்த்து நீர்) பயந்து விட்டதால் உமது கையை உம்முடன் அணைப்பீராக! (அந்த பயம் போய்விடும்.) ஆக, இவை இரண்டும் உமது இறைவன் புறத்திலிருந்து ஃபிர்அவ்ன் இன்னும் அவனது பிரமுகர்கள் பக்கம் (நீர் நபியாக செல்வதற்குரிய) இரண்டு அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள் பாவிகளான மக்களாக இருக்கின்றனர்.” (இவ்வாறு அல்லாஹ் மூஸாவிடம் கூறினான்.)
Tamil Translation - Omar Sharif“உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது குறை இன்றி (மின்னும்) வெண்மையாக வெளியேவரும். இன்னும், (பாம்பைப் பார்த்து நீர்) பயந்து விட்டதால் உமது கையை உம்முடன் அணைப்பீராக! (உமக்கு அந்த பயம் போய்விடும்.) ஆக, இவை இரண்டும் உமது இறைவன் புறத்திலிருந்து ஃபிர்அவ்ன் இன்னும் அவனது பிரமுகர்கள் பக்கம் (நீர் நபியாக செல்வதற்குரிய) இரண்டு அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள் பாவிகளான மக்களாக இருக்கிறார்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi32. உமது சட்டைப் பையில் உமது கையைப் புகுத்துவீராக. அது மாசற்ற பிரகாசமுள்ள வெண்மையாக வெளிப்படும். நீர் பயப்படாதிருக்கும் பொருட்டு உமது கைகளை உமது விலாவில் சேர்த்துக் கொள்வீராக. ஃபிர்அவ்னிடமும் அவனுடைய தலைவர்களிடமும் நீர் செல்லும் பொருட்டு இவ்விரண்டும் உமது இறைவனால் உமக்கு அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் மக்களாக இருக்கிறார்கள்'' (என்று அவருக்குக் கூறப்பட்டது).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70