وَأَنْ أَلْقِ عَصَاكَ فَلَمَّا رَءَاهَا تَهْتَزُّ كَأَنَّهَا جَآنٌّ وَلَّىٰ مُدْبِرًا وَلَمْ يُعَقِّبْ يَٰمُوسَىٰٓ أَقْبِلْ وَلَا تَخَفْ إِنَّكَ مِنَ ٱلْـَٔامِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“இன்னும், உமது கைத்தடியை எறிவீராக!” ஆக, அவர் அது ஒரு பெரிய பாம்பைப்போன்று நெளிவதாக பார்த்தபோது புறமுதுகிட்டவராக திரும்பி ஓடினார். அவர் (பயத்தால் திரும்பி) பார்க்கவில்லை. “மூஸாவே! முன்னே வருவீராக! பயப்படாதீர்! நிச்சயமாக நீர் பாதுகாப்பு பெற்றவர்களில் உள்ளவர்.”
Tamil Translation - Omar Sharif“இன்னும், உமது கைத்தடியை எறிவீராக!” ஆக, அது ஒரு பெரிய பாம்பைப் போன்று நெளிவதாக அவர் பார்த்தபோது புறமுதுகிட்டவராக திரும்பி ஓடினார். (பயத்தால்) அவர் (திரும்பி) பார்க்கவில்லை. “மூஸாவே! முன்னே வருவீராக! பயப்படாதீர்! நிச்சயமாக (பயப்படுகின்ற அனைத்திலிருந்தும்) நீர் பாதுகாப்பு பெற்றவர்களில் உள்ளவர்.”
Tamil Translation - Abdulhamid Baqawi31. (மேலும்) ‘‘ நீர் உமது தடியை எறிவீராக'' (என்றும் அவருக்குக் கூறப்பட்டது. அவ்வாறே அதை அவர் எறியவே) அது பெரியதொரு பாம்பாகி நெளிவதைக் கண்ட அவர் (பயந்து) அதைப் பின்தொடராது திரும்பி ஓடினார். (அச்சமயத்தில் அவரை நோக்கி) ‘‘ மூஸாவே! பயப்படாதீர். நீர் முன் நோக்கி வருவீராக! நிச்சயமாக நீர் அச்சமற்றவர்.