وَجَآءَ رَجُلٌ مِّنْ أَقْصَا ٱلْمَدِينَةِ يَسْعَىٰ قَالَ يَٰمُوسَىٰٓ إِنَّ ٱلْمَلَأَ يَأْتَمِرُونَ بِكَ لِيَقْتُلُوكَ فَٱخْرُجْ إِنِّى لَكَ مِنَ ٱلنَّٰصِحِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநகரத்தின் இறுதியிலிருந்து ஓர் ஆடவர் விரைந்தவராக வந்து கூறினார்: “மூஸாவே! (ஃபிர்அவ்னின்) பிரமுகர்கள் உம்மைக் கொல்வதற்கு உமக்காக ஆலோசிக்கின்றனர். ஆகவே, நீர் வெளியேறிவிடும்! நிச்சயமாக நான் உமக்கு (ஆலோசனை கூறியதில்) நன்மையை நாடுபவர்களில் ஒருவன்.”
Tamil Translation - Omar Sharifஅந்த நகரத்தின் இறுதியிலிருந்து ஓர் ஆடவர் விரைந்தவராக வந்து கூறினார்: “மூஸாவே! (ஃபிர்அவ்னின்) பிரமுகர்கள் உம்மைக் கொல்வதற்கு உமது விஷயத்தில் ஆலோசிக்கிறார்கள். ஆகவே, நீர் வெளியேறிவிடும்! நிச்சயமாக நான் உமக்கு நன்மையை நாடுபவர்களில் இருக்கிறேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi20. (இக்கூச்சல் மக்களிடையே பரவி, நேற்று இறந்தவனைக் கொலை செய்தவர் மூஸாதான் என்று மக்களுக்குத் தெரிந்து இவரைப் பழிவாங்கக் கருதினார்கள்.) அச்சமயம் பட்டிணத்தின் கோடியிலிருந்து ஒரு மனிதர் (விரைவாக) ஓடிவந்து மூஸாவே! ‘‘ மெய்யாகவே உம்மைக் கொலை செய்துவிட வேண்டுமென்று தலைவர்கள் முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால், நீர் (இவ்வூரைவிட்டு) வெளியேறி விடுவீராக. மெய்யாகவே நான் உமது நன்மைக்கே (இதைக்) கூறுகிறேன்'' என்று கூறினார்.