caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 19

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:19

فَلَمَّآ أَنْ أَرَادَ أَن يَبْطِشَ بِٱلَّذِى هُوَ عَدُوٌّ لَّهُمَا قَالَ يَٰمُوسَىٰٓ أَتُرِيدُ أَن تَقْتُلَنِى كَمَا قَتَلْتَ نَفْسًۢا بِٱلْأَمْسِ إِن تُرِيدُ إِلَّآ أَن تَكُونَ جَبَّارًا فِى ٱلْأَرْضِ وَمَا تُرِيدُ أَن تَكُونَ مِنَ ٱلْمُصْلِحِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, அவர் அவர்கள் இருவருக்கும் எதிரியாக உள்ளவனை தண்டிக்க நாடியபோது அவன் கூறினான்: “மூஸாவே! நீ என்னை கொல்ல நாடுகிறாயா? நேற்று ஓர் உயிரை நீ கொன்றது போன்று. நீ நாடவில்லை பூமியில் அநியாயக்காரனாக (அடக்குமுறையாளனாக, வன்முறையாளனாக) ஆகுவதைத் தவிர. சீர்திருத்தவாதிகளில் நீ ஆகுவதை நாடவில்லை.”
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் இருவருக்கும் எதிரியாக உள்ளவனை அவர் தண்டிக்க நாடியபோது (அவரை உதவிக்கு அழைத்தவன் மூஸா தன்னை கொல்ல நினைக்கிறார் என்று கருதி) அவன் கூறினான்: “மூஸாவே! நேற்று ஓர் உயிரை நீ கொன்றது போன்று நீ என்னை (இன்று) கொன்றுவிட நாடுகிறாயா? பூமியில் நீ அநியாயக்காரனாக (வன்முறையாளனாக) ஆகுவதைத் தவிர நீ நாடவில்லை. இன்னும், சீர்திருத்தவாதிகளில் நீ ஆகுவதை நீ நாடவில்லை.”
Tamil Translation - Abdulhamid Baqawi19. (அவனுக்கு உதவி செய்ய விரும்பி) அவனுக்கும் தனக்கும் எதிரியாக இருப்பவனைப் பிடிக்க விரும்பினார். (எனினும், இவருடைய இனத்தான் இவர் தன்னையே பிடிக்க வருவதாய்த் தவறாக எண்ணிப் பயந்து) ‘‘ மூஸாவே! நேற்றைய தினம் ஒரு மனிதனைக் கொலை செய்தது போல் என்னையும் நீர் கொலை செய்யக் கருதுகிறீரா? இவ்வூரில் (நீர் கொலை குற்றம் செய்யும்) வம்பனாக இருக்கக் கருதுகிறீரோ தவிர, சீர்திருத்தும் நல்ல மனிதராக இருக்க நீர் நாடவில்லை'' என்று கூச்சலிட்டான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70