فَخَرَجَ مِنْهَا خَآئِفًا يَتَرَقَّبُ قَالَ رَبِّ نَجِّنِى مِنَ ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, அவர் (தனது குற்றத்தை) பயந்தவராக (தன்னைத் துரத்தி பிடிக்க வருபவர்களை) எதிர்பார்த்தவராக அதிலிருந்து வெளியேறினார். அவர் கூறினார்: என் இறைவா! அநியாயக்கார மக்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்!
Tamil Translation - Omar Sharifஆக, அவர் (தனது குற்றத்தின் தண்டனையை) பயந்தவராக (தன்னைத் துரத்தி பிடிக்க வருபவர்களை) கண்காணித்தவராக அதிலிருந்து வெளியேறினார். அவர் கூறினார்: “என் இறைவா! அநியாயக்கார மக்களிடமிருந்து என்னை காப்பாற்று!”
Tamil Translation - Abdulhamid Baqawi21. ஆகவே, அவர் (தன்னை மக்கள் என்ன செய்யப் போகின்றனரோ என்று) கவலைப்பட்டுப் பயந்தவராக அவ்வூரை விட்டு வெளியேறி, ‘‘ என் இறைவனே! இவ்வக்கிரமக்கார மக்களிடமிருந்து நீ என்னை பாதுகாத்துக் கொள்வாயாக!'' என்று பிரார்த்தித்தார்.