فَأَصْبَحَ فِى ٱلْمَدِينَةِ خَآئِفًا يَتَرَقَّبُ فَإِذَا ٱلَّذِى ٱسْتَنصَرَهُۥ بِٱلْأَمْسِ يَسْتَصْرِخُهُۥ قَالَ لَهُۥ مُوسَىٰٓ إِنَّكَ لَغَوِىٌّ مُّبِينٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அந்)நகரத்தில் பயந்தவராக (செய்திகளை) எதிர் பார்த்தவராக (மறுநாள்) காலையில் அவர் இருந்தார். அப்போது நேற்று அவரிடத்தில் உதவி தேடியவன் (இன்றும்) அவரை உதவிக்கு கத்தி அழைத்தான். அவனுக்கு மூஸா கூறினார்: “நிச்சயமாக நீ ஒரு தெளிவான மூடன் ஆவாய்.”
Tamil Translation - Omar Sharifஆக, அந்த நகரத்தில் பயந்தவராக (செய்திகளை) எதிர் பார்த்தவராக (மறுநாள்) காலையை அவர் அடைந்தார். அப்போது நேற்று அவரிடத்தில் உதவி தேடிய (அவரது இனத்த)வன் (இன்றும் அவரிடம் உதவி தேடியவனாக) அவரை கத்தி அழைத்தான். அவனுக்கு மூஸா கூறினார்: “நிச்சயமாக நீ ஒரு தெளிவான மூடன் ஆவாய்.”
Tamil Translation - Abdulhamid Baqawi18. (அன்றிரவு அவருக்கு நிம்மதியாகவே கழிந்தது. எனினும்) காலையில் எழுந்து அந்நகரத்தில் (தன்னைப் பற்றி என்ன நடந்திருக்கிறதோ என்று) பயந்தவராகக் கவனித்துக் கொண்டிருந்த சமயத்தில், நேற்று இவரிடம் உதவி தேடியவன் (மறுமுறையும் தனக்கு உதவி செய்யுமாறு) கூச்சலிட்டு இவரை அழைத்தான். அதற்கு மூஸா அவனை நோக்கி ‘‘ நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கிறாய்'' என்று நிந்தித்து,