caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 13

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:13

فَرَدَدْنَٰهُ إِلَىٰٓ أُمِّهِۦ كَىْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ وَلِتَعْلَمَ أَنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவரை அவருடைய தாயாரிடம் நாம் திரும்பக் கொண்டுவந்தோம் அவளது கண் குளிர்வதற்காகவும், அவள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மை என்பதை அவள் அறிவதற்காகவும். என்றாலும் அவர்களில் (-இணைவைப்பவர்களில்) அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் வாக்கு உண்மை என்பதை) அறியமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, அவரை அவருடைய தாயாரிடம் அவளது கண் குளிர்வதற்காகவும், அவள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மை என்பதை அவள் அறிவதற்காகவும் நாம் திரும்பக் கொண்டுவந்தோம். என்றாலும், அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் வாக்கு உண்மை என்பதை) அறியமாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi13. (அவர்கள் அனுமதிக்கவே, அவள் மூஸாவுடைய தாயை அழைத்தும் வந்து விட்டாள்.) இவ்வாறு நாம் அவரை அவருடைய தாயிடமே சேர்த்துத் தாயின் கண் குளிர்ந்திருக்கவும் அவள் கவலைப்படாதிருக்கவும் செய்து, அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதுதான் என்று நிச்சயமாக அவள் அறிந்து கொள்ளும்படியும் செய்தோம். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியமாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70