caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naml அத்தியாயம், வசனம் 62

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 48 · 27:62

أَمَّن يُجِيبُ ٱلْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ ٱلسُّوٓءَ وَيَجْعَلُكُمْ خُلَفَآءَ ٱلْأَرْضِ أَءِلَٰهٌ مَّعَ ٱللَّهِ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது, எவன் சிரமத்தில் இருப்பவருக்கு -அவர் அவனை அழைக்கும் போது (அவருக்கு)- பதிலளித்து, மேலும், (அவருடைய) துன்பத்தை நீக்குகின்றானோ, இன்னும் உங்களை இப்பூமியின் பிரதிநிதிகளாக ஆக்குகின்றானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது அழைத்தாலும் கேட்காத, மனிதர்களுக்கு எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! (அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கொண்டு) நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.
Tamil Translation - Omar Sharifஅல்லது, எவன் சிரமத்தில் இருப்பவருக்கு - அவர் அவனை அழைக்கும் போது (அவருக்கு) - பதிலளித்து, மேலும், (அவருடைய) துன்பத்தை நீக்குவானோ, இன்னும், உங்களை இப்பூமியின் பிரதிநிதிகளாக ஆக்குவானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது அழைத்தாலும் கேட்காத, மனிதர்களுக்கு எந்த நன்மையையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! (அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கொண்டு) நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi62. (சிரமத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்பவர்கள் அபயமிட்டழைத்தால் அவர்களுக்குப் பதில் கூறி, அவர்களுடைய சிரமங்களை நீக்குபவன் யார்? பூமியில் உங்களை பிரதிநிதிகளாக ஆக்கி வைத்தவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இல்லவே இல்லை.) உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் வெகு சொற்பமே.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70