caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naml அத்தியாயம், வசனம் 63

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 48 · 27:63

أَمَّن يَهْدِيكُمْ فِى ظُلُمَٰتِ ٱلْبَرِّ وَٱلْبَحْرِ وَمَن يُرْسِلُ ٱلرِّيَٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهِۦٓ أَءِلَٰهٌ مَّعَ ٱللَّهِ تَعَٰلَى ٱللَّهُ عَمَّا يُشْرِكُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லது) தரை மற்றும் கடலின் இருள்களில் உங்களுக்கு எவன் வழிகாட்டுகிறானோ, இன்னும் தனது அருளுக்கு முன்னர் காற்றுகளை சுபச்செய்தியாக எவன் அனுப்புகிறானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்.
Tamil Translation - Omar Sharifஅல்லது, தரை மற்றும் கடலின் இருள்களில் உங்களுக்கு எவன் வழிகாட்டுகிறானோ, இன்னும் தனது அருளுக்கு முன்னர் காற்றுகளை சுபச்செய்தியாக எவன் அனுப்புகிறானோ அவன் (நாம் வணங்குவதற்கு) சிறந்தவனா? (அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாத சிலைகள் சிறந்தவையா? இத்தகைய) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi63. கடலிலோ அல்லது கரையிலோ இருள்களில் (சிக்கிய) உங்களுக்கு வழி காண்பிப்பவன் யார்? அவனுடைய அருள் மழைக்கு முன்னதாக (குளிர்ந்த) காற்றுகளை நற்செய்தியாக அனுப்பிவைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இல்லவே இல்லை.) அவர்கள் இணை வைப்பதை விட்டு அவன் மிக்க உயர்ந்தவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70