وَقَالُوا۟ مَالِ هَٰذَا ٱلرَّسُولِ يَأْكُلُ ٱلطَّعَامَ وَيَمْشِى فِى ٱلْأَسْوَاقِ لَوْلَآ أُنزِلَ إِلَيْهِ مَلَكٌ فَيَكُونَ مَعَهُۥ نَذِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கூறுகின்றனர்: இந்த தூதருக்கு என்ன! இவர் உணவு சாப்பிடுகிறார், கடைத் தெருக்களில் நடக்கிறார். இவர் மீது ஒரு வானவர் இறக்கப்பட்டு அவர் இவருடன் (மக்களை) எச்சரிப்பவராக இருக்க வேண்டாமா?
Tamil Translation - Omar Sharifஅவர்கள் கூறுகிறார்கள்: “இந்த தூதருக்கு என்ன ஏற்பட்டது!? இவர் உணவு சாப்பிடுகிறார்; இன்னும், கடைத் தெருக்களில் உலாவுகிறார். இவர் மீது ஒரு வானவர் இறக்கப்பட்டு அவர் இவருடன் (மக்களை) எச்சரிப்பவராக இருக்க வேண்டாமா?”
Tamil Translation - Abdulhamid Baqawi7. (பின்னும்) அவர்கள் கூறுகின்றனர்: ‘‘ இந்தத் தூதருக்கென்ன (நேர்ந்தது)? அவர் (நம்மைப் போலவே) உணவு உண்ணுகிறார்; கடைகளுக்கும் செல்கிறார். (அவர் இறைவனுடைய தூதராக இருந்தால்) அவருக்காக ஒரு வானவர் இறக்கிவைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அவ்வாறாயின், அவர் அவருடன் இருந்துகொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பாரே!