caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Furqaan அத்தியாயம், வசனம் 8

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 42 · 25:8

أَوْ يُلْقَىٰٓ إِلَيْهِ كَنزٌ أَوْ تَكُونُ لَهُۥ جَنَّةٌ يَأْكُلُ مِنْهَا وَقَالَ ٱلظَّٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَّسْحُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது இவருக்கு ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா! அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருக்க வேண்டாமா! இவர் அதிலிருந்து புசிப்பாரே! அநியாயக்காரர்கள் கூறுகின்றனர்: “நீங்கள் (உணவு சாப்பிடும்) குடல் உள்ள ஒரு (சாதாரண) மனிதரைத் தவிர (புனிதமான வானவர்களை) நீங்கள் பின்பற்றவில்லை.”
Tamil Translation - Omar Sharif“அல்லது, இவருக்கு ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா! அல்லது, இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் புசிக்க வேண்டாமா!” இன்னும் அந்த அநியாயக்காரர்கள் கூறுகிறார்கள்: “நீங்கள் குடல்கள் உள்ள ஒரு (உணவு சாப்பிடுகிற சாதாரண) மனிதரைத் தவிர (புனிதமான வானவர்களை) நீங்கள் பின்பற்றவில்லை.”
Tamil Translation - Abdulhamid Baqawi8. அல்லது அவருக்கு ஒரு புதையல் கொடுக்கப்பட வேண்டாமா? அல்லது அவர் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சோலை அவருக்கு இருக்க வேண்டாமா? (என்று கூறுகின்றனர்.) இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் சூனியம் செய்கின்ற ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் கூறுகின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70