وَهُوَ ٱلَّذِى جَعَلَ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ خِلْفَةً لِّمَنْ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் இரவையும் பகலையும் (ஒன்றுக்கு ஒன்று) பகரமாக அமைத்தான், நல்லறிவு பெற நாடுபவருக்கு அல்லது நன்றி செய்ய நாடுபவருக்கு.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவன்தான் இரவையும் பகலையும் (ஒன்றுக்கொன்று) பகரமாக (-ஒன்றுக்கு பின் ஒன்று மாறிவரக்கூடியதாக) அமைத்தான். ஏனெனில், நல்லறிவு பெற நாடுபவர் (இதன் மூலம்) நல்லறிவு பெறுவார்; அல்லது, நன்றி செலுத்த நாடுபவர் நன்றி செலுத்துவார் என்பதற்காக.
Tamil Translation - Abdulhamid Baqawi62. அவன்தான் இரவையும், பகலையும் மாறி மாறி வரும்படி செய்திருக்கிறான். (இதைக் கொண்டு) எவர்கள் நல்லுணர்ச்சி பெற்று, அவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறார்களோ அவர்களுக்காக (இதைக் கூறுகிறான்).