تَبَارَكَ ٱلَّذِى جَعَلَ فِى ٱلسَّمَآءِ بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَٰجًا وَقَمَرًا مُّنِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்களில் பெரும் கோட்டைகளை அமைத்தவன் மிக்க அருள் நிறைந்தவன். அவன்தான் அதில் சூரியனையும் ஒளிரும் சந்திரனையும் அமைத்தான்.
Tamil Translation - Omar Sharifவானங்களில் பெரும் கோட்டைகளை அமைத்தவன் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான். இன்னும், அவன்தான் அதில் சூரியனையும் ஒளிவீசும் சந்திரனையும் அமைத்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi61. (அந்த ரஹ்மான்) மிக்க பாக்கியமுடையவன். அவன்தான் வானத்தில் நட்சத்திரங்களை அமைத்து, அதில் (சூரிய) ஒளியையும், பிரகாசம் தரக்கூடிய சந்திரனையும் அமைத்தான்.