وَإِذَا قِيلَ لَهُمُ ٱسْجُدُوا۟ لِلرَّحْمَٰنِ قَالُوا۟ وَمَا ٱلرَّحْمَٰنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionரஹ்மானுக்கு (அந்த பேரருளாளனுக்கு) சிரம் பணியுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால் அவர்கள் கூறுகின்றனர்: “ரஹ்மான் யார்? நீர் ஏவக்கூடியவனுக்கு நாங்கள் சிரம் பணிய வேண்டுமா?” அது (-ரஹ்மானாகிய அந்த உண்மை இறைவனுக்கு மட்டும் சிரம் பணியுங்கள் என்று சொல்வது) அவர்களுக்கு வெறுப்பை அதிகப்படுத்தியது.
Tamil Translation - Omar Sharifரஹ்மானுக்கு (மகா கருணைமிக்க பேரருளாளனாகிய அல்லாஹ்விற்கு) நீங்கள் சிரம் பணியுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால் அவர்கள் கூறுகிறார்கள்: “ரஹ்மான் என்பவன் யார்? நீர் ஏவக் கூடியவனுக்கு நாங்கள் சிரம் பணிய வேண்டுமா?” என்று. அ(ர்ரஹ்மானாகிய அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் சிரம் பணியுங்கள் என்று சொல்வ)து, அவர்களுக்கு வெறுப்பை அதிகப்படுத்துகிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi60. (ஆகவே,) அந்த ரஹ்மானைச் சிரம் பணிந்து வணங்குங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், அவர்களுக்கு வெறுப்பு அதிகரித்து ‘‘ரஹ்மான் யார்? நீங்கள் கூறியவர்களுக்கெல்லாம் நாம் சிரம் பணிந்து வணங்குவதா?'' என்று கேட்கின்றனர்.